ஸ்கோடா கோடைகால சிறப்பு பரிசோதனை முகாம்

இந்த பரிசோதனை முகாமில் கார்களுக்கு 16 விதமான இலவச பரிசோதனைகள் செய்யப்படுகிறது. குறிப்பாக, ஏசி, எஞ்சின், ஸ்டீயரிங், கிளட்ச், எலக்ட்ரிக்கல், டயர் மற்றும் ரிம் செக்கப் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் தாமஸ் குயல் கூறியதாவது:
"வாடிக்கையாளர் நலனுக்கு நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறோம். இதற்கு முன் பண்டிகை கால சிறப்பு பரிசோதனை முகாம்கள் மற்றும் சீசனல் பரிசோதனை முகாம்களை நடத்தி வருகிறோம். இந்த வரிசையில், தற்போது கோடைகால இலவச பரிசோதனை முகாமை நடத்துகிறோம்.
நாடு முழுவதும் உள்ள இந்த இலவச பரிசோதனை முகாமில் 16 விதமான பரிசோதனைகள் செய்யப்படும். இந்த சர்வீஸ் முகாம் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். இந்த சர்வீஸ் முகாமில் 20,000 கார்களுக்கு பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








