சாலை வரி உயர்வால் கார் விற்பனை பாதிக்கப்படும்:மாருதி

By
Road Tax
டெல்லி: சாலை வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்,இந்த ஆண்டு கார் விற்பனையில் பாதிப்பு ஏற்படக்கூடும்,என்று மாருதிசுஸுகி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

கார்களுக்கான் பதிவு கட்டணம் மற்றும் சாலை வரியை பல்வேறு மாநில அரசுகள் உயர்த்தி வருகின்றன.மேலும் கார்களின் விலைக்கு தக்கவாறு சாலை வரியை பல்வேறு மாநில அரசுகள் கணிசமாக உயர்த்தியுள்ளன.இதனால்,கார் விற்பனை பாதிக்கப்படும் என்று முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாருதி நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் கூறியதாவது:

"தமிழகம்,கர்நாடகா மற்றும் டெல்லியில் கார்களின் விலைக்கு தக்கவாறு பதிவு கட்டணம் மற்றும் சாலை வரியை நிர்ணயம் செய்யும் வகையில் வரி விதிப்பு முறையில் மாநில அரசுகள் மாற்றங்கள் செய்துள்ளன.

கடந்த மாதம் சண்டிகர்அரசு கார்களுக்கான சாலை வரி விதிப்பில் புதிய முறையை அமல்படுத்தியது. ரூ.2500ஆக இருந்த சாலை வரி,தற்போது கார்களின் விலைக்கு தகுந்தவாறு உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.6லட்சம் வரை விலை கொண்ட கார்களுக்கு 2சதவீதமும்,ரூ.6லட்சம் முதல் ரூ.20லட்சம் வரை விலை கொண்ட கார்களுக்கு 3சதவீதமும்,ரூ.20 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட கார்களுக்கு 4சதவீதமும் சாலை வரி நிர்ணயிக்கக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று,அரியானாவி்ல் ரூ.5லட்சம் வரை விலை கொண்ட கார்களுக்கு 2சதவீதமும், ரூ.5லட்சம் முதல் ரூ.10லட்சம் வரை விலை கொண்ட கார்களுக்கு 4சதவீதமும் சாலை வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.10முதல் ரூ.20லட்சம் வரை விலையிலான கார்களுக்கு 6சதவீதமும்,ரூ.20லட்சத்திற்கு மேல் விலை கொண்ட கார்களுக்கு 8சதவீதம் சாலை வரியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் அரசு விரைவி்ல் புதிய சாலை வரி விதிப்பு முறையை அமல்படுத்த உள்ளது.

சாலை வரி உயர்வு,பெட்ரோல் விலை உயர்வு,கார் கடன் வட்டி உயர்வு மற்றும் பண வீக்கம் போன்ற காரணங்களால், இந்த ஆண்டு கார் விற்பனை எதிர்பார்த்த அளவு இருக்காது என்று கருதுகிறோம்,"என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, February 4, 2011, 14:03 [IST]
English summary
The top most passenger car maker in India, Maruti Suzuki's chief GM expressed concerns over the increase in road taxes which may block the sales. Thetax systems for registration and road have since been revised by many state governments like Tamilnadu, Karntaka and Delhi in the country.Increase on road tax may have a devastating effect on these sales,Already the oft increasing fuel price and fluctuating interest costs onloans are also major hitches in smooth sales,he remarked.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+