எஞ்சினியரிங் மாணவர்களுக்கு எஞ்சின்களை வழங்கிய மாருதி

பார்முலா ஒன் காரின் புரோட்டோ டைப் எனப்படும் மாதிரி காரை தயாரிக்கும் வகையில் கார் வடிவமைப்பு போட்டி ஒன்றை மாருதி நிறுவனம் நடத்துகிறது.
சுப்ரா எஸ்ஏஇ இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து மாருதி நடத்த உள்ள இந்த போட்டி சென்னை அருகேயுள்ள இருங்காட்டு கோட்டை கார் பந்தய ரேஸ் டிராக்கில் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் உள்ள 40 எஞ்சினியரிங் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் குழு இந்த போட்டியில் கலந்துகொள்ள உள்ளது.
இந்த நிலையில், போட்டியில் கலந்துகொள்ள உள்ள மாணவர்கள் கார் எஞ்சின் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், 40 எஞ்சின்களையும், அவற்றுக்கான 40 கியர்பாக்ஸ் உள்ளிட்டவற்றை நன்கொடையாகமாருதி வழங்கி உள்ளது.
800 சிசி திறன் கொண்ட அந்த எஞ்சின்கள் மற்றும் கியர்பாக்ஸ் உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு ரூ.1.5 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது எஞ்சின்களை மாருதி முதன்முறையாக எஞ்சினியரிங் மாணவர்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








