உலக கோப்பை வெற்றி: சேவாக்குக்கு வெர்னா கார் பரிசு

இதன்படி, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, தனது புத்தம் புதிய புளூயிடிக் வெர்னா காரை பரிசாக வழங்கியது.
டெல்லியில் நடந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு ஹூண்டாய் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் அர்விந்த் சக்சேனா வெர்னா காரின் சாவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
"உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு புத்தம் புதிய வெர்னா காரை வழங்குவதில் மிகுந்த பெருமையடைகிறோம். வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த கார் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களையும் அசத்தும்.
இதுவரை 21,000 வெர்னா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. மேலும், உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அனைத்து வீரர்களுக்கும் புதிய வெர்னா பரிசளிக்கப்பட உள்ளது.
மற்ற வீரர்களுக்கு அவரவர் சொந்த மாநிலத்தில் நடைபெற விழாவில் வெர்னா கார் பரிசளிக்க உள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








