வரும் 8ந் தேதி கோலியோஸ் எஸ்யூவி அறிமுகம்: ரினால்ட்

கிராஸ்ஓவர் எனப்படும் கலப்பின ரகத்தை சேர்ந்த இந்த எஸ்யூவி கார் டெல்லியில் உள்ள தாஸ் ஓட்டலில் நடைபெறும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அப்போதுதான் அதன் விலை உள்ளிட்ட விபரங்களை ரினால்ட் வெளியிடுகிறது.
2.0 லிட்டர் டிசிஐ எஞ்சினுடன் வரும் கோலியோஸ் 110 பிஎஸ் ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். தவிர, அகலமான குரோம்பூச்சுடன் கூடிய முன்பக்க கிரில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கோலியோஸ் காரின் முகப்பு மற்றும் பின்பக்க டேஞ்சர் விளக்குகளும் மறுவடிவமைப்புடன் வருகிறது. 5 பேர் அமர்ந்து செல்லும் வசதிகொண்டதாக வரும் புதிய ரினால்ட் கோலியோஸ், ரூ.20 லட்சம் விலையில் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் டொயோட்டோ பார்ச்சூனர் காருக்கு இந்த புதிய கிராஸ்ஓவர் எஸ்யூவி நேரடி போட்டியை கொடுக்கும் என்று ஆட்டோ வட்டாரங்கள் பரபரக்கின்றன. மேலும், இது ஆல்வீல் டிரைவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications