சென்னையில் டொயோட்டோ லிவா அறிமுகம்

Liva
சென்னை: அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் சந்தையில் களமிறங்கி உள்ள லிவாவை சென்னையில் அறி்முகப்படுத்தியுள்ளது டொயோட்டோ நிறுவனம்.

டொயோட்டோவின் முதல் சிறிய ரக காரான(ஹேட்ச்பேக் மாடல்) லிவா சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட எட்டியோஸ் செடான் காரின் வடிவமைப்பின் அடிப்படையில் ஹேட்ச்பேக் காராக வந்துள்ள லிவா சென்னை ஷோரூம்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

டொயோட்டோவின் வர்த்தக பிரிவு துணை மேலாண் இயக்குனர் சேகர் விஸ்வநாதன், லிவாவை சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

" நடப்பாண்டில் மார்க்கெட்டில் 5 சதவீத இடத்தை பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். லிவா மற்றும் எட்டியோஸ் கார்கள் மூலம் எங்களது இலக்கை வெகு சுலபமாக அடைய முடியும் என்று நம்புகிறோம்.

வாடிக்கையாளர் மத்தியில் எட்டியோஸ் போன்றே லிவாவுக்கும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று கருதுகிறோம். இதற்காக, கார் உற்பத்தி திறனை 70,000 லிருந்து 1.20 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

சென்னையில் லிவா ரூ.4.14 லட்சம் முதல் ரூ.5.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 5, 2011, 10:33 [IST]
English summary
Toyota has recently launched Etios Liva hatch back car in Chennai. It available in four models and selling in Rs.4.14 lakh to Rs.5.99 lakh price tag. Toyota is aiming big market share with liva and it calculates at 4.5-5 per cent market share in the overall passenger car segment with the introduction of Etios Liva.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+