பி.எம்.டபிள்யூ. கான்செப்ட் சூப்பர் கார் விரைவில் டெல்லியில் அறிமுகம்

BMW Vision
மும்பை: கண்களை கொள்ளை கொள்ளும் வடிவமைப்புடன் எதிர்கால தொழில்நுட்ப அம்சங்களை பிரதிபலிக்கும் வகையிலான பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் கான்செப்ட் சூப்பர் காரை வரும் 10ந் தேதி டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் அறிமுகம் செய்கிறார்.

பி.எம்.டபிள்யூ. 'விஷன் எஃபிசியன்ட் டைனமிக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கான்செப்ட் சூப்பர் கார் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் மிஷன் இம்பாசிபிள் பாகம்-4 ஹாலிவுட் திரைப்படத்தின் சூட்டிங்கில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பேட்டரி மற்றும் டீசல் எஞ்சினில் இயங்கும் ஹைபிரிட் ரகத்தை சேர்ந்த காராக இதை சந்தையில் அறிமுகம் செய்ய பி.எம்.டபிள்யூ. திட்டமிட்டுள்ளது. இந்த காரில் பொருத்தப்படும் இரட்டை தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் 356 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

பிரேக் அடிக்கும்போது சக்தியை சேமிக்கும் திறன்கொண்ட தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏராளமான எதிர்கால தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த காரை சந்தைப்படுத்த பி.எம்.டபிள்யூ. திட்டமிட்டுள்ளது. இந்த கான்செப்ட் சூப்பர் கார் வரும் 10ந் தேதி டெல்லியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில், மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் கலந்துகொண்டு இந்த கான்செப்ட் காரை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் தாமஸ் மட்டுசேக் மற்றும் பி.எம்.டபிள்யூ. இந்தியா தலைவர் ஆன்டிரியாஸ் ஷாஃப் உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர்.

இந்த விழாவில் காரின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும் என்று பி.எம்.டபிள்யூ. கூறியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 6, 2011, 15:22 [IST]
English summary
BMW is all set to launch pretty similar futuristic and revolutionary car, known by the name of BMW Vision Efficient Dynamics in India soon. This astonishing and amazing car will be revealed by Mr. Praful Patel, who is the Respectable Minister for Heavy Industries and Public Enterprises.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+