ஏப்ரலில் 7,000 கார்களை விற்று புதிய மைல்கல்லை கடந்தது வோக்ஸ்வேகன்

Volkswagen Passat
டெல்லி: கடந்த ஏப்ரலில் முதன்முறையாக ஒரே மாதத்தில் 7,000 கார்களை விற்று புதிய மைல்கல்லை கடந்துள்ளது வோக்ஸ்வேகன் நிறுவனம்.

கடந்த மாதம் வோக்ஸ்வேகனின் மொத்த விற்பனையில் போலோ மற்றும் வென்ட்டோ கார்கள் விற்பனை பெரும்பான்மையை பெற்றுள்ளது. கடந்த மாதம் 6,621 போலோ மற்றும் வென்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளது.

தவிர, சமீபத்தில் புளுமோஷன் தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட பஸாத் கார் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளதாக வோக்ஸ்வேகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வோக்ஸ்வேகன் விற்பனைப் பிரிவு போர்டு இயக்குனர் நீரஜ் கர்க் கூறியதாவது:

"கடும் சந்தை போட்டிக்கு மத்தியிலும் எங்களது விற்பனை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் கார் விற்பனை 7,000 என்ற புதிய மைல்கல்லை எட்டியிருப்பது புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

மேலும், கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பஸாத்துக்கு வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், 190 பஸாத் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பஸாத்துக்கு இந்திய சந்தையில் முக்கிய இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. மேலும், தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். போட்டிகளில் நடைபெறும் மைதானங்களில் பஸாத் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பஸாத் மூலை முடுக்குகளிலெல்லாம் வெகுவாக பிரபலமாகி வருகிறது,"என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, May 6, 2011, 10:08 [IST]
English summary
Volkswagen officially announced that the company sold 7,000 car units in the month of April, jointly including 6,621 units of Polo and Vento. It’s a terrific achievement by the major German car maker as the newly launched Passat that went on sale from April 8 this year, experienced magnificent response from customers by selling more than 190 units in less than a month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+