சொகுசுக் கார்களின் சொர்க்கபுரியாக மாறுகிறது இந்தியா

Mercedes Benz
டெல்லி: சொகுசுக் கார்களுக்கேற்ற சொர்க்கபுரியாக மாறி வருகிறது இந்தியா. சொகுசுக் கார்களின் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாம்.

இறக்குமதி வரியில் குறைப்பு, வருமானம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக சொகுசுக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம்.

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியாவில் சொகுசுக் கார்களின் விற்பனை அதிகரித்து வருவதால் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது சொகுசுக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.

பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி ஆகியவை 2010ம் ஆண்டு நல்ல உயர்வைக் கண்டுள்ளனவாம்.

ஜெர்மனியின் ஆடி நிறுவனம் கடந்த ஆண்டு 81 சதவீத விற்பனை உயர்வைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 3003 கார்களை அது விற்றுள்ளது. 2015ம் ஆண்டுக்குள் சொகுசுக் கார் விற்பனையில் முன்னோடி என்ற நிலையை அடைய அது இலக்கு வைத்துள்ளது.

அதேபோல வோக்ஸ்வேகன் நிறுவனம், இந்த ஆண்டு 4500 வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிக கார்களை விற்பனை செய்ய அது திட்டமிட்டுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமும், 2011ம் ஆண்டில் 20 முதல் 30 சதவீத உயர்வுக்குத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 51 சதவீத அளவுக்கு அதாவது 1,26,700 பேர், அதிகரித்துள்ளதும், சொகுசுக் கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, February 6, 2011, 13:58 [IST]
English summary
With economic growth picking up pace coupled with rise in disposable income and relaxation in import duty, India is fast emerging as a hot spot for luxury cars, as global auto giants are betting high on the Asia's third largest economy to increase their sales. World's leading luxury carmakers such as BMW, Mercedez-Benz and Audi had enjoyed a phenomenal sales growth in 2010. German carmaker Audi, which had recorded 81 per cent sales growth at 3,003 units last year, is targeting to emerge as a leader in luxury car space in India by 2015. For 2011, the Volkswagen Group firm has set a sales target of 4,500 vehicles, an increase of 50 per cent over 2010.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+