கார்களின் விலையை 2% வரை உயர்த்தியது மஹிந்திரா

Mahindra Scorpio
டெல்லி: உற்பத்தி செலவீனம் அதிகரிப்பால் கார்கள் உள்பட தனது அனைத்து வாகனங்களின் விலையையும் 2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது மஹிந்திரா.

கடந்த ஆண்டு முதல் வாகன தயாரிப்புக்கான முக்கிய மூலப்பொருட்களின் விலை எகிடுதகிடாக அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விலை உயர்வு அஸ்திரத்தை கையிலெடுத்து வருகின்றன.

உற்பத்தி செலவீனத்தை தாக்கு பிடிக்க முடியாத பல முன்னணி நிறுவனங்கள் கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் வாகனங்களின் விலையை அடுத்தடுத்து உயர்த்தின. இது வாடிக்கையாளர் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழும் மஹிந்திரா,ஸ்கார்ப்பியோ, ஸைலோ கார்கள் உள்ளிட்ட தனது அனைத்து வாகனங்களின் விலையையும் 1.5 முதல் 2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

உற்பத்தி செலவீனத்தை சமாளிக்க ஏற்கனவே திட்டமிட்டபடி, வாகனங்களின் விலை கடந்த மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக மஹிந்திரா மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் விவேக் நாயர் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் மஹிந்திரா தனது அனைத்து ரக வாகனங்களின் விலையையும் 2 வரை சதவீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 6, 2011, 10:54 [IST]
English summary
Mahindra hiked the prices of its entire range of products, such as the Scorpio, the Xylo and the Bolero, by up to 2 per cent last month because of rising raw material costs and certain planned increases.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+