மாருதி கார் வடிவமைப்பு போட்டி: புனே கல்லூரி சாம்பியன்

Maruti Logo
சென்னை: மாருதி- சுப்ரா எஸ்ஏஇ இணைந்து நடத்திய பார்முலா ஒன் கார் வடிவமைப்பு போட்டியில் புனேயை சேர்ந்த எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

மாருதி கார் நிறுவனமும், சுப்ரா எஸ்ஏஇ நிறுவனமும் இணைந்து எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான பார்முலா ஒன் கார் வடிவமைப்பு போட்டியை நடத்தின.

நாடு முழுவதும் உள்ள 38 முன்னணி எஞ்சினியரிங் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் குழு இந்த போட்டியில் கலந்துகொண்டன.

சென்னை அருகேயுள்ள திருபெரும்புதூரில் உள்ள மெட்ராஸ் மோட்டார்கிளப் அரங்கில் நடந்த இறுதி போட்டிக்கு 33 எஞ்சினியரிங் கல்லூரிகள் தகுதி பெற்றது.

மாணவர்கள் வடிவமைத்திருந்த பார்முலா ஒன் காரின் புரோட்டோ டைப்பை, நீதிபதி குழுவினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்தனர்.

பாதுகாப்பு, வடிவம், செலவீனம், செயல்திறன் மற்றும் சந்தை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கருத்தில்கொள்ளப்பட்டன.

விறுவிறுப்பாக நடந்த முடிந்த இந்த போட்டியில் புனேயை சேர்ந்த ஏஐஎஸ்எஸ்எம்எஸ் எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்திருந்த பார்முலா ஒன் கார் அதிக புள்ளிகளை பெற்றதால் முதலிடத்தை பிடித்தனர்.

வெறும் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் கோவையை சேர்ந்த பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் முதலிடத்தை இழந்து இரண்டாம் இடம் பிடித்தனர்.

டெல்லியை சேர்ந்த சர்தார் பட்டேல் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற புனே கல்லூரி மாணவர்களின் பார்முலா ஒன் புரோட்டோ டைப் காரை 2012ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்க மாருதி- சுப்ரா எஸ்ஏஇ முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 6, 2011, 11:14 [IST]
English summary
Maruti Suzuki and Supra SAEINDIA 2011 1st Formula one car dfesign competition held in Madras motorsports club at Sriperumpudur. After three action packed days, team AISSMS from Pune bagged the first position and The Team Pegasus from PSG College of Technology, Coimbatore and SPCE Racing of Sardar Patel College from New Delhi bagged the second and third position respectively. In a closely fought competition, after a rigorous evaluation 33 of the 38 teams could reach the ‘endurance event on the final day. Veteran automobile experts’ shortlisted 33 teams on parameters like safety, robustness, design, cost, performance and marketability at Madras Motorsports Club, Sriperumbudur on Sunday.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+