கே-10 எஞ்சின் வந்த பிறகு இரட்டிப்பாகிய மாருதியின் கார் விற்பனை

Maruti Alto K-10
டெல்லி: அதிக மைலேஜ், குறைந்த கார் புகை, குறைந்த பராமரிப்பு ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்ட கே-10 எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், தனது அனைத்து மாடல் கார் விற்பனையும் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக மாருதி நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

நாட்டின் நம்பர் ஒன் கார் தயாரிப்பாளர் என்ற பெருமையை மாருதி தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. இந்திய சந்தையில் நீண்ட காலமாக இருந்தாலும், வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் மாருதிக்கு சந்தையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், தனது முதல் இடத்தை மட்டும் மாருதி இதுவரை யாருக்கும் விட்டு தராமல் கெட்டியாக பிடித்து சாதித்து வருகிறது. கார் விற்பனையில் மாருதி நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கே-10 எஞ்சின் அதில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து மாருதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

"கடந்த 2008ம் ஆண்டு முதன்முதலில் ஏ-ஸ்டார் காரில் கே-சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஆல்ட்டோ, வேகன்-ஆர், எஸ்திலோ, ஸ்விப்ட் மற்றும் ஸ்விப்ட் டிசையர் கார்களில் கே-10 எஞ்சின் பொருத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்பின் ஆல்ட்டோவின் விற்பனை இருமடங்கு உயர்ந்தது. மாத விற்பனை 20,000 என்ற அளவில் இருந்த ஆல்ட்டோ விற்பனை தற்போது 38,000 கார்களாக உயர்ந்துள்ளது. இதேபோன்று, மற்ற மாடல்களின் விற்பனையும் உயர்ந்துள்ளது.

மாருதி விற்பனையில் முக்கிய இடம் வகிக்கும் வேகன்-ஆர் கார்களின் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 2009-10ம் நிதியாண்டில் 1.45 லட்சம் வேகன்-ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டன.
ஆனால், கடந்த நிதியாண்டில் வேகன்-ஆர் விற்பனை 12.5 சதவீதம் உயர்ந்து 1.63 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கே-10 எஞ்சின் பொருத்தப்பட்ட ஆல்ட்டோ கார் லிட்டருக்கு 20 கி.மீ. மைலேஜையும், ஏ-ஸ்டார் மற்றும் எஸ்டிலோ கார்கள் லிட்டருக்கு 19 கி.மீ. மைலேஜையும் கொடுக்கின்றன. மேலும், விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளன.

மொத்ததில் நிறுவனத்தின் மொத்த விற்பனையை கே-10 எஞ்சின் வெகுவாக உயர்த்தியுள்ளது என்று கூறினால் மிகையாகாது. இதுதவிர, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கே-12 சீரிஸ் பெட்ரோல்ே எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களும் சந்தையில் முக்கிய இடம் பிடிக்கும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 6, 2011, 10:00 [IST]
English summary
The celebrated K-series engine first offered on A-star has proved magical for many other Maruti Suzuki offerings as well. As an outcome, the models have grown significantly adding to the overall growth story and become bestsellers in their categories.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+