ஸ்ட்ரைக் எதிரொலி: ஸ்விப்ட் காருக்கான புக்கிங் நிறுத்தம்

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மாருதியின் புதிய ஸ்விப்ட் காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இதுவரை 90,000 புதிய ஸ்விப்ட் கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஸ்விப்ட் உற்பத்தி செய்யப்படும் மானேசரில் உள்ள மாருதி ஆலையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஸ்விப்ட் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்ப்டடுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வரும் வேலை நிறுத்தம் காரணமாக 8,400 ஸ்விப்ட் கார்களின் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக தொழிலாளர்களை நியமித்து மானேசர் ஆலையில் கார் உற்பத்தியை மாருதி துவங்கியது.
ஆனாலும், முழு வீச்சில் உற்பத்தி நடைபெற வில்லை. 8,400 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டிய நிலையில், கடந்த வாரம் வெறும் 500 ஸ்விப்ட் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதனால், ஸ்விப்ட் காரை புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் டெலிவிரி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், 90,000 என்ற இமாலய எண்ணிக்கையை ஸ்விப்ட் கடந்துள்ள நிலையில், உற்பத்தி ஸ்தம்பித்துள்ளதால் ஸ்விப்ட் காருக்கான புக்கிங்கை பெரும்பாலான மாருதி டீலர்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








