டயர் விலையை 5% வரை உயர்த்தப் போவதாக சியட் அறிவிப்பு

கடந்த ஜனவரி மாதம் டயர்களின் விலையை 4 முதல் 5 சதவீதம் சியட் உயர்த்தியது. இந்த நிலையில், டயர் தயாரிப்புக்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான இயற்கை ரப்பரின் விலை வரலாறு காணாத வகையில் கிலோ ரூ.250 என்ற இமாலய விலையை எட்டியுள்ளது.
இயற்கை ரப்பரின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், உற்பத்தி செலவீனம் பன்மடங்கு உயர்ந்துள்ளதால் மீண்டும் விலை உயர்வை அறிவித்துள்ளது சியட்.
இந்த மாத இறுதியில் விலை உயர்வு அமலுக்கு வரும் என சியட் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அனார்ப் பான்ர்ஜி கூறியுள்ளார். மேலும, கடந்த நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் நிகர லாபம் 84 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த ஆண்டு ஜனவரி-மார்ச் இடையிலான காலாண்டில், சியட்டிற்கு ரூ.11.86 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








