டபுள் கேபினுடன் புதிய ஜீனியோ பிக்கப் டிரக்: மஹிந்திரா அறிமுகம்

ஒரே ஒரு இருக்கை வரிசையுடன் கார் போன்ற முகப்பு கொண்ட ஹை- கிளாஸ் அம்சங்களுடன் ஜீனியோ என்ற புதிய பிக்கப் டிரக்கை மஹிந்திரா நிறுவனம் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது.
இதற்கு வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், இரண்டு வரிசை இருக்கைகள் (டபுள் கேபின்) மற்றும் சரக்கு ஏற்றும் வசதிகொண்ட கேரியருடன் புதிய ஜீனியோ பிக்கப் டிரக்கை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா மூத்த துணைத்தலைவர் விவேக் நாயர் கூறியதாவது:
" இரண்டு இருக்கை வரிசை கொண்ட ஜீனியோ பிக்கப் டிரக்கை அறிமுகம் செய்துள்ளோம்.
இந்த டிரக் கட்டுமானத்துறைக்கு பெரிதும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டபுள் கேபினுடன் ஏற்கனவே பொலெரோ பிக்கப் டிரக்கை விற்பனை செய்து வருகிறோம்.
இரண்டிற்கும் இடையில் வெறும் ரூ.38,000 மட்டுமே விலையில் வித்தியாசம் இருக்கிறது.
இருப்பினும், ஜீனியோ வெளிநாட்டு சந்தை தரத்துடன் தயாரிக்கப்படுகிறது," என்றார்


Click it and Unblock the Notifications








