மாருதி ஆல்ட்டோ vs செவர்லே ஸ்பார்க்- ஒப்பீட்டு அலசல்

Chevrolet Spark and Maruti Alto K10
அபரிதமான வளர்ச்சி கண்டு வரும் சிறிய கார் மார்க்கெட்டில் நித்தம் ஒரு புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், எத்தனை புதிய கார்கள் வந்தாலும், தனது மார்க்கெட்டை விட்டுத்தரமால், ஏன் அருகில் கூட நெருங்க முடியாத அளவுக்கு விற்பனையில் சாதித்து வரும் மாடல்களும் உண்டு.

அதில், நம் நாட்டு மக்களின் நம்பிக்கைக்குரிய நண்பனாக, குறைந்த விலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற காராக விளங்கும் மாருதி நிறுவனத்தின் ஆல்ட்டோவும், அதற்கு நேர் போட்டியை தரும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே ஸ்பார்க் கார் பற்றிய சிறப்பம்சங்களின் ஓப்பீட்டை காணலாம்.

வாகன தயாரிப்பில் ஜாம்பவான்களான இரு நிறுவனங்களும், இந்திய மக்களின் நாடித்துடிப்பை கண்டறிந்து, அதற்கேற்ப இரண்டு கார்களையும் வடிவமைத்துள்ளதே, இரண்டு கார்களின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

வடிவமைப்பு:

சிறிய குடும்பங்களுக்கு கனக்கச்சிதமாக பொருந்தும் இரு கார்களும் அழகான வடிவமைப்பை பெற்றுள்ளன. நீளவாக்கில் பெப்பியான தோற்றத்துடன் ஆல்ட்டோவை வடிவமைத்துள்ளது மாருதி. ஆனால், செவர்லே ஸ்பார்க் சற்று வளத்தியான தோற்றத்துடனும், கிளாசிக் ஹேட்ச்பேக் என்று சொல்லும்படியான வெளிப்புற வடிவமைப்பை கொண்டுள்ளது ஸ்பார்க். வெளிப்புற வடிவமைப்பில் ஸ்பார்க் மனதை வருடுகிறது.

உட்புற வடிவமைப்பு:

பழைய மாடலைவிட உட்புற வடிவமைப்பில் சில மாறுதல்களுடன் வந்துள்ளது ஆல்ட்டோ கே10. இருக்கைகள் மற்றும் டேஷ்போர்டில் மாற்றங்கள் தெரிகிறது. செவர்லே ஸ்பார்க் உட்புற வடிவமைப்பு காஸ்ட்லியான காரின் தோற்றத்தை தருகிறது. இரண்டு கார்களிலும் ஐந்து பேர் அமர்ந்து செல்ல முடியும் என்றாலும். ஸ்பார்க்கின் ஹேட்ரூம், லெக்ரூம் வசதியாக இருக்கிறது.

எஞ்சின் ஒப்பீடு:

மாருதி ஆல்ட்டோ 996 சிசி 3 சிலிண்டர் கே10 எஞ்சினை கொண்டுள்ளது. இது 68 பிஎஸ் திறனையும், 6,200 ஆர்பிஎம் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. ஆனால், ஸ்பார்க் 1000 சிசி நான்கு சிலிண்டர் எஞ்சினுடன் வருகிறது. இது 63 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

கையாளுமை:

நகர சாலைகளில் ஓட்டுவதற்கு ஆல்ட்டோதான் பெஸ்ட். டிரைவிங்கின்போது அலுப்பு தட்டவில்லை. மேலும், சுமூத்தாக செல்கிறது. ஆனால், நகர சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஸ்பார்க் பேலன்சான டிரைவிங்கை கொடுக்கிறது. ஸ்டீயரிங் வீல் அமைப்பும் சுகமான டிரைவிங் அனுபவத்தை கொடுக்கிறது.

மைலேஜ் ஒப்பீடு:

ஆல்ட்டோ கே10 எஞ்சின் லிட்டருக்கு 14.8 கிமீ மைலேஜ் தருகிறது. அதேவேளை, ஸ்பார்க் லிட்டருக்கு 15.1 கிமீ முதல் 20.7 கிமீ வரை சாலை நிலைகளுக்கு ஏற்ப மைலேஜை கொடுக்கிறது.

விலை ஒப்பீடு:

மாருதி ஆல்ட்டோ கே-10 கார் ரூ.3.09 லட்சம் முதல் ரூ.3.22 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. செவர்லே ஸ்பார்க் கார் ரூ.3.23 லட்சம் முதல் ரூ.3.81 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

எது சிறந்தது?

சொகுசு என்று பார்க்கும்போது செவர்லே ஸ்பார்க் சிறந்ததாக தோன்றுகிறது. ஆனால், விலை, பராமரிப்பு, சர்வீஸ் வசதிகள், பிராண்டு பெயருக்கான மதிப்பு என்று பார்க்கும்போது இந்த போட்டியின் இறுதியில் மாருதியின் ஆல்ட்டோ கார் வெகு எளிதாக நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 7, 2011, 12:23 [IST]
English summary
The two frontline contenders in the budget small car category, the Maruti Suzuki Alto K10 and the Chevrolet Spark are neck to neck in a competition where plain and practical are winning tactics, or rather survival skills. Here are given some specifications and features comparison of two cute hatchback cars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+