800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு

ஆல்ட்டோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய 800 கார் விரைவில் அறிமுகம் செய்யப்படுவதையொட்டி, பழைய 800 கார் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த மாருதி முடிவு செய்துள்ளது.
கடந்த 1984ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி-800 லட்சக்கணக்கானோரின் அந்தஸ்தை உயர்த்தி, அவர்களின் அடையாளமாகவும் திகழ்ந்தது. இன்றளவும் மக்களால் விரும்பப்படும் கார் மாடல்களில் ஒன்று.
குறைந்த விலை, அதிக மைலேஜ், பார்க்கிங் பிரச்னை இல்லாத கார் என்ற பல பெருமைகள் மாருதி-800 வசம் இருந்து வருகிறது. இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாடு விதிகள் உள்ளிட்ட காரணங்களால் மாருதி-800 தற்போது மாநகங்களில் விற்பனை செய்யப்படவில்லை.
இருந்தாலும், சிறிய நகரங்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய 800 காரை அறிமுகம் செய்ய வேண்டி, பழைய 800 காருக்கு விடை கொடுக்க மாருதி முடிவு செய்துள்ளது. மாருதி-800 உற்பத்தியை முழுவதுமாக நிறுத்த மாருதி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, சப்ளையர்களுக்கு மாருதி முறைப்படி தகவல் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் டிசம்பர் மாதத்துடன் 800 கார் உற்பத்தி முழுவமாக நிறுத்தப்பட இருப்பதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு மத்தியில் புதிய 800 கார் அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய 800 கார் ஆல்ட்டோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தவிர, ஆல்ட்டோவைவிட குறைந்த விலையில் அந்த கார் விற்பனைக்கு கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாருதி-800 உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், அந்த கார் வரலாற்றில் வாழும் என்று உறுதியாக கூறலாம்.


Click it and Unblock the Notifications








