டிசையர் உற்பத்தியை குர்கான் ஆலைக்கு மாற்றியது மாருதி

Maruti Dzire
குர்கான்: மானேசர் தொழிற்சாலையில் நடந்த ஸ்டிரைக் பிரச்னையையடுத்து, ஸ்விப்ட் டிசையர் கார் உற்பத்தியை குர்கானுக்கு மாற்றியுள்ளது மாருதி.

கடந்த மாதம் மாருதியின் மானேசர் தொழிற்சாலையில் நடந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, அங்கு கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாருதியின் செடான் காரான ஸ்விப்ட் டிசையரின் உற்பத்தி முற்றிலும் முடங்கியது.

இதனால், அந்த காரை புக்கிங் செய்து காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் காரை டெலிவிரி கொடுக்க இயலாத நிலை மாருதிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், டிசையர் கார் உற்பத்தியை மானேசர் தொழிற்சாலையிலிருந்து, குர்கான் ஆலைக்கு மாற்றியுள்ளது மாருதி.

இதுகுறித்து மாருதி செய்திதொடர்பாளர் கூறுகையில்," அடுத்த வாரம் முதல் குர்கான் ஆலையிலிருந்து டிசையர் காரை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், ஸ்விப்ட், ஏ-ஸ்டார், மற்றும் எஸ்எக்ஸ்-4 கார்களின் உற்பத்தி மானேசர் ஆலையிலேயே தொடரும்," என்று கூறினார்.

கடந்த மாதம் மானேசர் தொழிற்சாலையில் நடந்த தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாகவே, மாருதி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக ஆட்டோ வட்டாரங்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, July 7, 2011, 12:37 [IST]
English summary
Maruti Suzuki has shifted production of its flagship sedan – Swift Dzire – to its Gurgaon plant from its Manesar plant. The production of Dzire had suffered badly due to the last month’s workers' strike at the Manesar plant of the company. Unlike the Manesar plant, the Gurgaon plant has a clean history, escaping any major industrial disputes in past decade.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+