10 லட்சம் கே- சீரிஸ் எஞ்சின்கள் உற்பத்தி: மாருதி

எரிபொருள் சிக்கனத்தில் சிறந்து விளங்கும் அந்த நிறுவனத்தின் கே-சீரிஸ் எஞ்சின் உற்பத்தி 10 லட்சத்தை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு கே- சீரிஸ் எஞ்சினை மாருதி அறிமுகப்படுத்தியது. அந்த நிறுவனத்தின் ஏ-ஸ்டார் காரில்தான் முதன்முதலில் கே-சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டு சந்தைக்கு வந்தது.
பின்னர், அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களான வேகன்-ஆர், ஸ்விப்ட், எஸ்டிலோ, ஆல்ட்டோ என மற்ற கார்களும் கே- சீரிஸ் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு களமிறக்கப்பட்டன.
கே-சீரிஸ் எஞ்சின் கொண்ட மாருதி கார்கள் அதிக மைலேஜ் கொடுப்பதால், வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இதனால், கே-சீரிஸ் எஞ்சின் உற்பத்தி குறுகிய காலத்தில் பல புதிய மைல்கற்களை கடந்து வந்தது.
இந்த நிலையில், அறிமுகமாகி மூன்று ஆண்டுகள்கூட நிறைவடையாத நிலையில், கே-சீரிஸ் எஞ்சின் உற்பத்தி 10 லட்சத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து மாருதியின் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் சஷாங்க் வத்சவா கூறுகையில்," எங்களது தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் அளித்து வரும் ஆதரவு எங்களுக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது.
மார்க்கெட் லீடர் என்ற வகையில் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த தலைமுறைக்கான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய தயாரிப்புகளை வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








