ஸ்விப்ட் கார் உற்பத்தியை நிறுத்தியது மாருதி

மாருதியின் முத்திரை பதித்த மாடல்களில் ஒன்றான ஸ்விப்ட் காரின் அடுத்த தலைமுறை அம்சங்கள் கொண்ட புதிய மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதனால், மாருதியின் மானேசர் தொழிற்சாலையில் தற்போதைய ஸ்விப்ட் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், டீலர்களில் ஸ்விப்ட் காருக்கான புக்கிங் செய்யப்படுவதும் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய ஸ்விப்ட கார் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அறிமுகம் செய்ய மாருதி திட்டமி்ட்டுள்ளது.
விரைவில் வர இருக்கும் அடுத்த தலைமுறை ஸ்விப்ட் கார், சைஸில் சற்று பெரிதாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
தற்போதைய காரில் பொருத்தப்பட்டிக்கும் அதே 1.2 லிட்டர் கே.சீரிஸ் எஞ்சின்தான் என்றாலும், புதிய ஸ்விப்ட் கார் அதிக மைலேஜ் மற்றும் பிக்கப் கொடுக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், விலையிலும் புதிய ஸ்விப்ட் கார் 5 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








