ரூ.22.99 லட்சத்தில் புதிய கோலியோஸ் எஸ்யூவி: ரினால்ட் அறிமுகம்

Renault Koleos
நம் நாட்டில் அதிகம் விற்பனையாகும் பிரிமியம் எஸ்யூவி காரான டொயோட்டோ பார்ச்சூனருக்கு கடும் போட்டியை கொடுக்கும் அம்சங்களுடன் கோலியோஸ் எஸ்யூவி காரை ரினால்ட் அறிமுகம் செய்துள்ளது.

4 வீல் டிரைவுடன் வந்துள்ள இந்த எஸ்யூவி குறைந்த கார்பன் வெளியிடும் எஞ்சினுடன் வந்துள்ளது. 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த எஸ்யூவி லிட்டருக்கு 13.7 கிமீ தூரம் செல்லும் என்றும் ரினால்ட் தெரிவிக்கிறது.

மேலும், இதன் எஞ்சின் 149 பிஎச்பி பவரையும், அதிகபட்சம் 320 என்எம் டார்க்கையும் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிமியம் ரகத்தை சேர்ந்த இந்த எஸ்யூவி காரில் மலையில் ஏறவும், இறங்குவதற்கும் உதவும் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் மற்றும் ஹில் டிஸன்ட் கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது.

அனைத்து பிரேக்குகளுக்கும் சரிசமமாக பிரேக்கிங் ஆற்றலை அனுப்பும், எலக்ட்ரானிக்கல் பிரேக் பவர் டிஸ்டிரிபியூசன்(இபிடி), ஆனட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம்(ஏபிஎஸ்) மற்றும் 6 ஏர்பேக்குகளுடன் இந்த எஸ்யூவி வந்துள்ளது.

இந்த புதிய எஸ்யூவியில் 2 வீல் டிரைவ் மோடிலிருந்து 4 வீல் டிரைவ் மோடுக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. மேலும், போஸ் மியூசிக் சிஸ்டமும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

அனைத்து பிரிமியம் அம்சங்களுடன் கொண்ட இந்த காருக்கு 20,000 கிமீ.,க்கான 3 இலவச சர்வீஸ் மற்றும் நீட்டித்துக்கொள்ளும் வசதியுடன் விற்பனைக்கு கொண்டு வருகிறது ரினால்ட்.

அடுத்த 10 நாட்களில் நாடு முழுவதும் உள்ள 14 ரினால்ட் ஷோரூம்களில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டொயோட்டோ பார்ச்சூனருக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில், வந்துள்ள இந்த கார் ரூ.22.99 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 8, 2011, 17:09 [IST]
English summary
he new Renault Koleos comes with captur concept styling, and will be fitted with a Bose music system as a standard feature, ensuring it's a premium car. Recording max power of 149 bhp and 320 Nm of torque, the new Renault Koleos is powered by a 2liter diesel engine (dCi). The premium SUV will boast of lowest emissions in its class, and offers a mileage of 13.7 kpl in the 4WD auto mode. The Renault Koleos luxury SUV has been launched in India for a price of Rs. 22.99 lakhs ex-showroom Delhi. Delivery for the luxury SUV will begin in 10 days. The car comes with a hill start assist and hill descent control feature. Available as a 4X4 variant, this 6-speed automatic transmission also features a keyless entry & ignition, parking sensors, and dual zone climate control. Safety features include EBD ABS, and six airbags.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+