நானோவுக்கு புதிதாக 300 விற்பனை மையங்கள்: டாடா

Tata Nano
மும்பை: பட்டிதொட்டியெல்லாம் நானோ காரின் புகழ்மனத்தை பரப்ப சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் நானோ காரை விற்பனை செய்ய புதிதாக 300 விற்பனை மையங்களை டாடா மோட்டார்ஸ் திறக்கிறது.

உலகின் மிகக்குறைந்த விலை கார் என்ற பெருமையை டாடா நானோ தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. இதுவரை, நானோவுக்கு போட்டியாக எந்த ஒரு காரும் களமிறக்கப்படவில்லை.

இந்த நிலையில், தீப்பிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்னைகளால் சரிவடைந்த நானோ காரின் விற்பனை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 10,012 நானோ கார்கள் விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில், ஜூனில் நானோ விற்பனை பாதியாக குறைந்துவிட்டது.

கடந்த மாதம் 5,451 நானோ கார்கள் மட்டும் விற்பனையாகி உள்ளது. இதையடுத்து, நானோ காரின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளை டாடா மீண்டும் துவங்கியுள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் புதிதாக 300 விற்பனை மையங்களை நானோ காருக்காக திறக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் செய்திதொடர்பாளர் கூறியதாவது:

" பெட்ரோல் விலை உயர்வு, கார் கடன் வட்டி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆட்டோ துறை பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பருவமழை காலங்களில் கார் விற்பனை மந்தமாக இருப்பது வாடிக்கை. எனவே, அடுத்து வரும் மாதங்களில் கார் விற்பனை சூடுபிடிக்கும்.

மேலும், நானோ கார் விற்பனைக்கு புதிதாக 300 விற்பனை மையங்களை திறக்க உள்ளோம். இதன்மூலம், பட்டிதொட்டியெல்லாம் நானோ காரை கொண்டு செல்ல முடியும்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, July 8, 2011, 11:02 [IST]
English summary
Tata Motors which had to do some marketing efforts last year to pick-up its sales after it had reached abysmal levels, is now planning to launch 300 new dedicated sales outlets in 2011-12 to tap into the non-urban demand for the compact car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+