கார் விலையை 2% உயர்த்துகிறது டொயோட்டோ

இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பின்(சியாம்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் டொயோட்டோ மார்க்கெட்டிங் பிரிவு நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் கலந்து கொண்டார்.
அப்போது நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
"உற்பத்தி செலவீனம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கார்கள் விலையை 2 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். வரும் அக்டோபர் 1ந் தேதி முதல் இந்த விலை உயர்வை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
தவிர, ஜப்பானிய ரூபாயான யென் மதிப்பும், இந்திய ரூபாயின் மதிப்பிலும் உள்ள ஏற்றத்தாழ்வும் விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளது," என்றார்.
உற்பத்தி செலவீனத்தை காரணம் காட்டி கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்கனவே டொயோட்டோ நிறுவனம் கார்கள் விலையை மொத்தமாக 3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், மீண்டும் அந்த கார்கள் விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








