பெங்களூர் ஆலையின் உற்பத்தியை இருமடங்காக்கும் டொயோட்டோ

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எட்டியோஸ் செடான் காரை டொயோட்டோ அறிமுகப்படுத்தியது. குறைந்த விலை அதிக தரம் கொண்டதாக இருப்பதால், எட்டியோஸ் விற்பனை அதிகரித்து வருகிறது.
இதேபோன்று, சமீபத்தில் இந்திய சந்தைக்கு தக்கவாறு அனைத்து அம்சங்களையும் கொண்ட லிவா ஹேட்ச்பேக் காரையும் டொயோட்டோ அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த இரண்டு கார்களின் வரவால் டொயோட்டோவின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதற்கு தக்கவாறு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பெங்களூரில் உள்ள தனது இரண்டாவது தொழிற்சாலையின் உற்பத்தி திறனை இருமடங்காக உயர்த்த டொயோட்டோ திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து டொயோட்டோ விற்பனைப் பிரிவு துணைத்தலைவர் எஸ்.ஷெட்டி கூறியதாவது:
" உற்பத்தியை அதிகரிக்க வேண்டி பெங்களூரில் உள்ள இரண்டாவது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளோம்.
இதன்மூலம், ஆண்டுக்கு 70,000 கார்கள் உற்பத்தி செய்யும் திறன்படைத்த அந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 1.20 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக மாறும்.
இதற்காக, ரூ.215 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம். விரிவாக்கம் செய்யும் பணிகள் அடுத்த ஆண்டு மத்தியில் நிறைவடையும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








