ஆகஸ்டில் கார் விற்பனை சரிவு; பைக் விற்பனை அமோகம்

Car Sales
கடந்த மாதம் உள்நாட்டு கார் விற்பனை 10 சதவீதம் சரிந்தது. அதேவேளை, இருசக்கர வாகன விற்பனை 15 சதவீதம் உயர்ந்தது.

உலகின் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது ஆட்டோமொபைல் ச்நதை என்ற பெருமையை இந்தியா தக்கவைத்து வருகிறது. நாட்டின் ஆட்டோமொபைல் வளர்ச்சியில் கார் மார்க்கெட் குறிப்பிடத்தக்க பங்கு வகித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கார் விற்பனையில் தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்வு, கார் கடன்களுக்கான வட்டி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கார் விற்பனை சரிந்துள்ளது.

அதேவேளை, இரு சக்கர வாகன விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்கிறது. கடந்த மாதம் கார் மற்றும் இருசக்கர வாகன விற்பனை குறித்த புள்ளிவிபர அறிக்கையை இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு (சியாம்) இன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

"கடந்த மாதம் உள்நாட்டில் 1,44,516 கார்கள் மட்டுமே விற்பனையானது. ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 1,60,713 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதை ஒப்பிடும்போது, கடந்த மாதம் கார் விற்பனையில் 10.08 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆனால், இருசக்கர வாகன விற்பனை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு உள்நாட்டில் ஆகஸ்ட்டில் 7,27,542 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியது. அதே கடந்த மாதம் 8,39,772 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த மாதம் விற்பனை 15.43 சதவீதம் வளர்ந்துள்ளது. மேலும், ஏற்றுமதி உள்பட மொத்த இருசக்கர வாகனங்களின் விற்பனை 16.1 சதவீதம் உயர்ந்துள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 9, 2011, 17:19 [IST]
English summary
Domestic passenger car sales declined by 10.08 per cent to 144,516 units in August, 2011, from 160,713 units in the same month last year. According to figures released by the Society of Indian Automobile Manufacturers (SIAM) today, motorcycle sales in the country grew by 15.43 per cent during the month to 839,772 units from 727,542 units in the corresponding month last year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+