புதிய சொகுசு காரை அறிமுகம் செய்தது மெர்சிடிஸ் பென்ஸ்

மும்பை, கிராண்ட் ஹயாத்தில் நடந்த வண்ணமிகு விழாவில் மேம்படுத்தப்பட்ட தனது சிஎல்எஸ் பிரிமியம் செடான் காரை அறிமுகம் செய்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.
பகல்நேர ரன்னிங் லைட்ஸ், எல்இடி ஹெட்லைட்ஸ், கம்பீரமான முன்பக்க கிரில் என முகப்பிலிருந்து பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் வகையில் வடிவமைப்பை பெற்றுள்ளது.
உட்புறம் 4 பேர் தாராளமாக அமர்ந்து செல்லும் வசதிகொண்ட இருக்கைகள், பொருட்கள் வைப்பதற்கான பெரிய லக்கேஜ் ரூம் என வசதிகளிலும் குறைவில்லை.
3.5 லிட்டர் வி-6 எஞ்சின் 306பிஎச்பி ஆற்றலையும் அதிகபட்சம் 370என்எம் டார்க்கையும் வாரி இறைக்கும் திறன் கொண்டது. இதில், 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்ப்டடுள்ளது.
இது ஆடி ஏ-7 ஸ்போர்ட்பக் மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் அம்சங்களுடன் வந்துள்ளது. இந்த கார் மும்பையில் ரூ.66.67 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications