ஸ்பெஷல் எடிசன் போலோ, வென்ட்டோ கார்கள் அறிமுகம்

பிரீஸ் என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் கார்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. வரும் 10ந் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த கார்கள் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் கொண்டிருக்கும்.
பார்க்கிங் சென்சார், டச் ஸ்கிரீன் மல்டி மீடியா ப்ளேயர், ஜிபிஎஸ் நேவிகேஷன், யூஎஸ்பி போர்ட் மற்றும் புளூடூத் இணைப்பு வசதியுடன் வரும் இந்த கார்களை தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களின் விலையிலேயே விற்பனை செய்யப்பட்டும் என்று வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.
போலோ பிரீஸ் கார் பெட்ரோல் மாடலிலும், ஸ்பெஷல் எடிசன் வென்ட்டோ கார்கள் பெட்ரோல் மட்டும் டீசல் மாடலிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








