புதிய ஹைபிரிட் சூப்பர் காரை அறிமுகம் செய்ய டாடா ஜாகுவார் மும்முரம்

சி-எக்ஸ்75 என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கிமீ.,க்கு மேல் எலக்ட்ரிக் மோட்டாரில் செல்லும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.
வரும் 2013ம் ஆண்டு இந்த காரின் உற்பத்தியை துவங்க டாடா திட்டமிட்டுள்ளது. இதே ஆண்டில்தான் பிஎம்டபி்ள்யூ தனது ஐ-8 ஹைபிரிட் சூப்பர் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த கார் ஒரு சார்ஜில் 35 கிமீ வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ ஐ-8 அறிமுகப்படுத்த இருக்கும் ஹைபிரிட் சூப்பர் காருக்கு டாடா ஜாகுவாரின் புதிய ஹைபிரிட் சூப்பர் கார் கடும் சந்தை போட்டியை கொடுக்கும் என தெரிகிறது.
இதுதவிர, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான் காருக்கு போட்டியாக புதிய என்ட்ரி லெவல் செடான் காரை அறிமுகப்படுத்தவும் டாடா திட்டமிட்டுள்ளது.
மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டுகளில் 40 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கார் மாடல்களை டாடா களமிறக்குகிறது.
இதற்காக, ஆண்டுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் முதலீடு செய்ய இருப்பதாகவும் டாடா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








