பஞ்சாபில் 'ஏகே-47' பேன்ஸி பதிவு எண் ரூ.3.10 லட்சத்துக்கு ஏலம்

Fancy Registration Number
பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் காருக்கான பேன்ஸி நம்பரை லட்ச லட்சமாக கொட்டி கொடுத்து வாங்கும் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. பேன்ஸி நம்பர் கலாச்சாரத்தால் பஞ்சாப் போக்குவரத்து துறைக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'ஏகே-47' என்ற எந்திர துப்பாக்கியின் குறியீட்டு எண்ணை குறிக்கும் வகையில் சிஎச்-01-ஏகே-0047(CH01-AK-0047) என்ற பதிவு எண்ணை கடந்த வெள்ளிக்கிழமை போக்குவரத்து துறை பொது ஏலத்தில் விட்டது.

குறைந்தபட்ச ஏலத்தொகையாக அந்த எண்ணுக்கு போக்குவரத்துறை ரூ.10,000 நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த பதிவு எண் அனைவரின் எதிர்பார்ப்பையும் விஞ்சி ரூ.3.10 லட்சத்துக்கு ஏலம் போய் அசத்தியது.

மேலும், சொகுசு காருக்காக அந்த எண்ணை ஏலத்தில் எடுத்த அதே மத அமைப்புதான், இதற்கு முன்பு ஏகே-56 என்ற பதிவு எண்ணையும் ஏலத்தில் எடுத்தது என்பது கொசுறு தகவல்.

மேலும், அன்றைய தினம் இதுபோன்று ஏலம் விடப்பட்ட 93 பேன்ஸி பதிவு எண்கள் மூலம் போக்குவரத்து துறைக்கு ரூ.48 லட்சம் வருவாய் கொ(கி)ட்டியது.

இதேபோன்று, பஞ்சாபில் குறிப்பாக சண்டிகரில் பேன்ஸி எண்களை ஏலத்தில் எடுப்பது சர்வசாதாரணமாகி வருகிறது.

கடந்த மேமாதம் சண்டிகரை சேர்ந்த நரீந்தர் சிங் ஷெர்கில் என்பவர் தனது டொயோட்டோ பார்ச்சூனர் காருக்கு சிஎச்-01-ஏசி-0001(CH-AC-1) என்ற தனக்கு ராசியான பதிவு எண்ணை ரூ.10 லட்சம்(அந்த காரின் விலையே ரூ.20 லட்சம்தான்) கொடுத்து ஏலத்தில் எடுத்தாராம்.

மேலும், சிஎச்-01-ஏஎச்-0001(CH-01-AH-0001) என்ற எண் ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனதாக சண்டிகர் போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

பேன்ஸி நம்பர்களை பொது ஏலம் விடுவதன் மூலம் கடந்த சில மாதங்களில் பஞ்சாப் போக்குவரத்து துறைக்கு எகிடுதகிடான வருவாய் கிட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 11, 2011, 16:27 [IST]
English summary
A Punjab-based religious sect taken away the 'AK-47' fancy registration number for a luxury car in open auction. It is the series of registration number has starting recently. The actual number read as 'CH01-AK-0047'. The idea of having the 'AK-47' for a high-end luxury car has again shown the Punjabi fetish for fancy numbers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+