சாங்யாங் எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா

Korando SUV
அடுத்த ஆண்டு சாங்யாங் மோட்டார்ஸ் எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

எஸ்யூவி தயாரிப்பில் இந்தியாவில் எப்படி மஹிந்திரா புகழ்பெற்று விளங்குகிறதோ, அதேபோன்று கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனமும் எஸ்யூவி தயாரிப்பில் சர்வதேச அளவில் ஸ்பெலிஷ்ட்.

ஆனால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த சாங்யாங் நிறுவனத்தை மஹிந்திரா சில மாதங்களுக்கு முன் கையகப்படுத்தியது. அதன்பின் நிதி நிலைமைகள் சரியாகி, மஹிந்திரா ராசியோ என்னவோ, சாங்யாங் எஸ்யூவி கார் விற்பனையும் அமோக வளர்ச்சி கண்டு வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற சாங்யாங் நிறுவனம் தயாரிக்கும் எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மத்தியில் சாங்யாங்கின் பிரபல எஸ்யூவி மாடல்களான கொரண்டோ மற்றும் ரெக்ஸ்டான் எஸ்யூவி கார்களை முதல்கட்டமாக இந்தியாவில் அறிமுகம் செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது. அதன்பின்னர், ஆக்ட்யோன் எஸ்யூவியும் இந்தியா வருகிறது.

இதன்மூலம், இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் அசைக்க முடியாத இடத்தை பெறமுடியும் என்று மஹிந்திரா கருதுகிறது. வரும் டிசம்பரில் தனது குளோபல் எஸ்யூவி கார் மாடலான எக்ஸ்யூவி-500 அறிமுகத்தை தொடர்ந்து, சாங்யாங் எஸ்யூவிகளை வரிசைகட்ட மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 11, 2011, 10:54 [IST]
English summary
Mahindra SUV called XUV-500 will hit the Indian roads by the end of 2011 after which, the firm will launch Ssang Yong’s range of SUV’s in India. M&M had acquired Ssang Yong which is a South Korean firm famous for its SUVs, earlier in February 2011. The Korando and Rexton SUV’s will be amongst the first to be launched in India by Ssang Yong. The Actyon may make its way to India later.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+