நிசான் பிராண்டு மேனேஜர் பயிற்சிக்கு 18 பேர் தேர்வு

Nissan Logo
சென்னை: இந்த ஆண்டுக்கான நிசான் பிராண்டு மேனேஜர் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு18 எம்பிஏ மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜப்பானை சேர்ந்த நிசான் கார் நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

தனது பிராண்டு பெயரை இந்திய மக்களிடையே பிரபலப்படுத்தும் முயற்சிகளில் அந்த நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

இதன் ஒருபகுதியாக, தனது பிராண்டை பிரபலபடுத்துவதற்காக நிசான் ஸ்டூடன்ட் பிராண்டு மேனேஜர் புரோகிராம்(என்எஸ்பிஎம்) என்ற பெயரில் எம்பிஏ மாணவர்களுக்கான சிறப்பு போட்டி தேர்வை அந்த நிறுவனம் கடந்த ஆண்டு துவங்கியது.

இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த போட்டி தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பயி்ற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை நிசான் நிறுவனம் வழங்குகிறது.

இந்த ஆண்டு போட்டி தேர்வில் கலந்துகொள்வதற்கான பதிவு கடந்த மேமாதம் 30ந் தேதி துவங்கியது.

இந்த போட்டியில் கலந்துகொள்வதற்கான பதிவு சென்னை, மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய நான்கு நகரங்களில் நடந்தது. நாடு முழுவதும் உள்ள 450 முன்னணி மேலாண்மை கல்வி நிறுவனங்களை சேர்ந்த 2,843 மாணவர்கள் பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு மார்க்கெட்டிங் யுக்தி, மக்கள் தொடர்பு, மொழிப்புலமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இறுதியில் சிறந்த மார்க்கெட்டிங் யுக்திகளை தெரிவித்து அனைத்து பிரிவுகளிலும் தேர்வு பெற்ற 18 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் நிசான் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் நிரந்தரமாக பணி அமர்த்தப்பட உள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் சென்னை லயோலா மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை ஐஎப்எம்ஆர் ஆகிய மேலாண்மை கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் இடம்பெற்றுள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 11, 2011, 14:04 [IST]
English summary
Nissan Motor India Pvt.Ltd. (NMIPL) has announced the selection of 18 enterprising youth from across India as Nissan Student Brand Manager’s. Incidentally the Nissan Student Brand Manager (NSBM) Program 2011 managed to garner over 2,843 student registration from over 450 colleges across 15 Indian cities, in only its second year showcasing the popularity of this unique student initiative to promote the company’s brand in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+