செலிபரேஷன் எடிசன் மான்ஸா: டாடா அறிமுகம்

Tata Manza Celebration Edition
பண்டிகை காலத்தையொட்டி வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்களுடன் செலிபரேஷன் எடிசன் மான்ஸா காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், முன்னணி கார் நிறுவனங்கள் புதிய கார் மாடல்களையும், மேம்படுத்தப்பட்ட மாடல்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், மஹிந்திரா, வோக்ஸ்வேகன், டொயோட்டோ உள்ளி்ட்ட நிறுவனங்கள் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஸ்பெஷல் எடிசன் கார்களை களமிறக்கின.

இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்துகொண்டுள்ளது. தனது மான்ஸா செடான் காரின் செலிபரேஷன் எடிசன் காரை அந்த நிறுவனம் நேற்று மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

புதிய இண்டிரியர், ஸ்டிக்கர் மற்றும் இதர கூடுதல் அம்சங்களுடன் செலிபரேஷன் எடிசன் மான்ஸா வந்துள்ளது.

ரிவர்ஸ் சென்சார், லெதர் இருக்கைகள், கறுப்பு ஆக்கிரமிப்புடன் கூடிய உள் அலங்காரம் ஆகியவை செலிபரேஷன் எடிசன் மான்ஸாவின் கூடுதல் அம்சங்கள்.

டாப் வேரியண்ட் மான்ஸா கார் மட்டுமே செலிபரேஷன் எடிசன் காராக கிடைக்கும். மேலும், சாதாரண மாடலைவிட டீசல் மாடல் செலிபரேஷன் எடிசன் மான்ஸா ரூ.27,000 கூடுதலாகவும், பெட்ரோல் மாடல் ரூ.17,000 கூடுதல் விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

செலிபரேஷன் எடிசன் மான்ஸா ரூ.7.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக இடவசதி கொண்ட கார் என்று மீடியாவால் அங்கீகரிக்கப்பட்ட மான்ஸாவின் செலிபரேஷன் எடிசன் நிச்சயம் வாடிக்கையாளர்களிடத்தும் நல்ல வரவேற்பு பெறும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துளளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 11, 2011, 13:50 [IST]
English summary
Tata Motors today launched the Manza Celebration Edition executive sedan at a mouth watering price of Rs.7.94 Lakhs9 ex showroom, Delhi). The Manza Celebration Edition is a sedan that is loaded with several features that you will only get as options in the regular Manza. Tata Motors has aptly launched the Manza Celebration Edition during the festival celebrations.Tata Motors has to be complimented for the quality of the ride, design, interior fittings and performance in the Manza. The Manza Celebration Edition goes one notch higher with better fit and finish in the interior along with a black interior colour scheme.The new features of the Tata Manza Celebration Edition are: Reverse Sensors, Leather 'feel' Seats and rich Ebony Black interior colour scheme. The car is truly a top end variant of the Manza Elan. The diesel variant of the celebration edition is costlier than the Elan by Rs.27,000 while the petrol variant is Rs.17,000 costlier than the petrol powered Elan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+