சகன் ஆலையில் 1 லட்சம் கார்கள் உற்பத்தி: வோக்ஸ்வேகன்

Volkswagen Polo
சகன்: மஹாராஷ்டிர மாநிலம், சகனிலுள்ள ஆலையில் வோக்ஸ்வேகன் நிறுவனம் ஒரு லட்சம் கார்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை கடந்துள்ளது.

இந்திய சந்தையில், வோக்ஸ்வேகன் தாமதமாகவே கால் பதித்ததது. இருப்பினும், அந்த நிறுவனத்தின் கார் விற்பனை மாதாமாதம் உயர்ந்து வருவதால், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்று வருகிறது.

மஹாராஷ்டிர மாநிலம், சகன் என்ற இடத்தில் அதிநவீன வசதிகள் கொண்ட தொழிற்சாலையை வோக்ஸ்வேகன் அமைத்து உள்ளது.

இந்த தொழிற்சாலையில் கடந்த 18 மாதங்களாகத்தான் கார் உற்பத்தியை அதிகப்படுத்தியது. ஆனால், அதற்குள் அந்த தொழிற்சாலையில் 1 லட்சம் கார்களை வோக்ஸ்வேகன் உற்பத்தி செய்துள்ளது.

கிரின் அம்சங்கள் கொண்ட சகன் தொழிற்சாலையில் வோக்ஸ்வேகனின் போலோ, வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ஃபேபியா கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து வோக்ஸ்வேகன் தலைவர் ஜான் சாக்கோ கூறுகையில்," எங்கள் நிறுவனம் புதிய மைல்கல்லை கடந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. தற்போது 40 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டிலேயே பெறப்படுகின்றன. இதை 70 சதவீதமாக உயர்த்த புதிய உதிரிபாக சப்ளையர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, July 11, 2011, 12:25 [IST]
English summary
Volkswagen has been reported that after a little over 18 months from the start of serious production at its greenfield plant at Chakan, Volkswagen India has rolled out its 100,000th car from the plant. The company makes variants of the VW Polo and Vento, as well as the Skoda Fabia at the Chakan plant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+