மார்க்கெட் பங்களிப்பை இழக்கும் மாருதியின் பிரபல மாடல்கள்

நாட்டின் மொத்த கார் விற்பனையில் பாதியை தக்கவைத்து வரும் மாருதி நிறுவனத்தின் மாருதி-800, ஆல்ட்டோ, வேகன்-ஆர், எஸ்டிலோ, ரிட்ஸ், ஏ-ஸ்டார்,ஸ்விப்ட் உள்ளிட்ட 7 கார் மாடல்கள் விற்பனையில் மார்க்கெட்டில் இதுவரை அசைக்க முடியாத இடத்தை தக்கவைத்து வருகின்றன.
இந்த நிலையில், பல்வேறு புதிய கார் நிறுவனங்களின் வரவால் சிறிய ரக கார் மார்க்கெட்டில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாக மாருதி கார்கள் தங்களது மார்க்கெட் பங்களிப்பை இழந்து வருவது தெரியவந்துள்ளது.
கடந்த நிதிஆண்டின் கார் விற்பனை குறித்து சியாம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் அடிப்படையில் இசட்ஆர்ஜி நிறுவனம் ஆய்வு நடத்தியதில் இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. இதில், ஆல்ட்டோ கார் மட்டும் விதிவிலக்காக தனது மார்க்கெட் பங்களிப்பை விட்டுத் தராமல் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.
கடந்த 2009-10 நிதி ஆண்டில் 12.15 சதவீதமாக இருந்த வேகன்-ஆர் காரின் மார்க்கெட் பங்களிப்பு, கடந்த 2010-11ம் ஆண்டில் 10.55 சதவீதமாக குறைந்துவிட்டது. மாருதியின் விற்பனையில் வேகன்-ஆர் இரண்டாம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, ஏ-ஸ்டார் காரின் மார்க்கெட் பங்களிப்பு 2.70 சதவீதத்திலிருந்து 2.39 சதவீதமாகவும், ஸென் எஸ்டிலோவின் மார்க்கெட் பங்களிப்பு 3.49 சதவீதத்திலிருந்து 3.38 சதவீதமாகவும், ஸ்விப்ட் காரின் பங்களிப்பு 9.70 சதவீதத்திலிருந்து 9.11 சதவீதமாகவும் குறைந்துவிட்டது.
ரிட்ஸ் காரின் பங்களிப்பு 5.29 சதவீதத்திலிருந்து 4.45 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம்(சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








