பழைய ஜெட்டாவுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி: வோக்ஸ்வேகன்

Volkswagen Jetta
டெல்லி: வரும் 17ந் தேதி புதிய ஜெட்டா கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதையொட்டி, தேங்கி கிடக்கும் பழைய ஜெட்டா கார்களை விற்று தீர்க்க ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்குவதாக வோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது.

புதிய ஜெட்டா அறிமுகம் செய்யப்போவதாக வோக்ஸ்வேகன் அறிவித்ததையடுத்து, பழைய ஜெட்டா பிரிமியம் செடான் காரின் விற்பனை அடியோடு படுத்துக்கொண்டது.

டீலர் குடோன்களில் பெருமளவில் ஜெட்டா கார்கள் தேக்கமடைந்ததால், விழிபிதுங்கியுள்ள வோக்ஸ்வேகன் ஸ்டாக் உள்ள பழைய மாடல் ஜெட்டா கார்களை விற்று தீர்க்க ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இருப்பினும், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வரும் புதிய ஜெட்டா காரை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் திட்டமிட்டுள்ளதால், இந்த தள்ளுபடி சலுகை எடுபடுமா என்பது சந்தேகம்தான்.

ரூ.14 லட்சம் விலை கொண்ட ஜெட்டா காருக்கு ரூ.75,000 தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்றும் கருதப்படுகிறது.

இந்தநிலையில், ரூ.95.67 லட்சம் விலை கொண்ட தனது பேண்டன் சொகுசு காருக்கு ரூ.25 லட்சம் வரை தள்ளுபடி வழங்குவதாகவும் வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, August 12, 2011, 10:53 [IST]
English summary
August is the month of launches with a number of important cars lined-up to be unveiled in front of the masses. Volkswagen has also confirmed the launch date of its all new 2011 Volkswagen Jetta which is 17th of August. But since the 2011 Jetta is supposed to replace the current model, the company is offering a price discount of Rs. 75,000 to clear the existing stock.The cash discount of upto 75,000 is quite inviting but it would be difficult to clear a huge number of units from the stock as people who want to buy a Jetta will definitely be waiting for the newer model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+