2020ல் இந்தியாவில் ஆண்டுக்கு 30,000 கார்கள் விற்பனை: ஆடியின் கணிப்பு

ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம் இந்தியாவின் சொகுசு கார் விற்பனை சந்தையில் பிரிக்கமுடியாத இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆடி நிறுவனம் 3,003 சொகுசு கார்களை விற்பனை செய்து 81 சதவீத விற்பனை வளர்ச்சியை எட்டியது.
மேலும், இந்த ஆண்டு 4,500 கார்களை விற்க ஆடி இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனை வளர்ச்சி ஆடியின் மனதில் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மேலும் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
ஆடி நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
"இந்தியாவின் விற்பனை வளர்ச்சி கொடுத்த ஊக்கம் காரணமாக விரைவில் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட காரை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். தவிர, பல புதிய மாடல்களும் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம், விற்பனையில் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியை எட்டுவோம்.
தற்போதைய விற்பனை வளர்ச்சியை வைத்து பார்க்கும்போது, வரும் 2015ம் ஆண்டில் இந்தியாவில் ஆண்டுக்கு 15,000 கார் விற்பனை இலக்கை கடந்துவிடுவோம். வரும் 2020ம் ஆண்டில், ஆண்டுக்கு 25,000 லிருந்து 30,000 கார்கள் விற்பனை என்ற புதிய எண்ணிக்கை அடைவோம் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








