ஹோண்டா ஜாஸ் விலை ரூ.1.75 லட்சம் குறைப்பு

இந்திய சந்தையில் அதிக விலை கொண்ட ஹேட்ச்பேக் காராக ஹோண்டா ஜாஸ் இருக்கிறது. இந்த காரின் ஆரம்ப விலையே ரூ.7.36 லட்சத்தில்தான் துவங்குகிறது.
தாராள இடவசதி, தரமான கட்டமைப்பு கொண்ட ஹோண்டா பிராண்டு காராக இருந்தாலும், பயமுறுத்தும் விலையால் ஜாஸ் பக்கம் அனேக வாடிக்கையாளர்கள் தலைவைத்து படுப்பதில்லை.
இதனால், அந்த காரின் விற்பனை எப்போதும் மந்தமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தையில் புதிய புதிய கார்களின் வரவால் ஜாஸ் விற்பனை முற்றிலும் முடங்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, டொயோட்டோ நிறுவனம் ரூ.4 லட்சத்தில் சமீபத்தில் லிவா ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தியுள்ளதும் ஹோண்டாவை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது.
எங்கே ஜாஸ் காரின் கொஞ்சநஞ்ச விற்பனையும் படுத்துவிடுமோ என்று பயந்துபோன அந்த நிறுவனம் அந்த காரின் விலையை ரூ.1.75 லட்சம் வரை ஒரேடியாக குறைத்துள்ளது.
விலை குறைக்கப்பட்ட ஜாஸ் காரின் விலை தற்போது ரூ.5.76 லட்சமாக இருப்பதாக டீலர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஜாஸ் விற்பனை உயரும் என்று ஹோண்டா நம்புகிறது.
இருப்பினும், ஜாஸ் விலையை குறைத்தது குறித்து ஹோண்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விற்பனை குறைந்ததால் கடந்த மாதம் சிட்டி கார் விலையை ரூ.66,000 வரை ஹோண்டா குறைத்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








