வால்வோவின் S80 பிரிமியம் சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்

Volvo S60
டெல்லி: பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய S80 பிரிமியம் சொகுசு காரை ரூ.30 லட்சம் விலையில் வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சுவீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் சொகுசு கார் மற்றும் பஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. வால்வோ தயாரிப்புகளுக்கு இந்தியாவில் பலத்த வரவேற்பு உள்ளது. இந்திய கார் சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ற வகையில் புதிய மாடல்களை வால்வோ அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த வரிசையில், அனைத்து அம்சங்களுடன் கூடிய S80 பிரிமியம் சொகுசு காரை வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய S80 கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். இதில், குரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளன.

இதன் பெட்ரோல் எஞ்சின் 304hp திறனையும், டீசல் எஞ்சின் 205hp திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 18 இஞ்ச் கொண்ட அகலமான வீல் மற்றும் முகப்பு விளக்குகள் ஆகியவை இதன் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

இந்திய சந்தையில் ஆடி A4,மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களுக்கு வால்வோவின் S80 பிரிமியம் சொகுசு கார் நிச்சயம் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, March 13, 2011, 14:48 [IST]
English summary
Expected to be one of the sportiest sedans to ever enter the Indian luxury sedan market, the Volvo S60 has now been launched in India, at a competitive Rs. 30 lakhs price range.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+