ஏப்ரலில் உள்நாட்டு கார், பைக் விற்பனை கிடுகிடு உயர்வு

Toyota i
டெல்லி: கடந்த மாதம் உள்நாட்டு கார் விற்பனை 13 சதவீதமும், பைக் விற்பனை 23 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சியாம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கடந்த ஏப்ரலில் உள்நாட்டு சந்தையில் 1,62,825 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, கடந்த ஆண்டு ஏப்ரலில் 1,43,862 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இதை ஒப்பிடுகையில், உள்நாட்டு கார் விற்பனை 13.18 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இதேபோன்று, பைக் விற்பனையும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த மாதம் 8,09,565 பைக்குகள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 6,56,096 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதை ஒப்பிடும்போது, உள்நாட்டு விற்பனை கடந்த ஏப்ரலில் 23.38 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை 22.80 சதவீதம் உயர்ந்தது. இதில், சரக்கு வாகனங்களின் விற்பனை 8.22 சதவீதம் உயர்ந்தது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 14, 2011, 11:41 [IST]
English summary
Domestic passenger car sales jumped by 13.18 per cent to 1,62,825 units in April from 1,43,862 units in the same month last year. According to the figures released by the Society of Indian Automobile Manufacturers (SIAM), motorcycle sales in the country during the month grew by 23.39 per cent to 8,09,565 units from 6,56,096 units in the corresponding month last year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+