ஃபெராரியின் சூப்பர் கார் வடிவமைப்பு போட்டி பைனலில் புனே கல்லூரி

அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்கள், வடிவமைப்பு, உதிரிபாகங்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய சூப்பர் காரை வடிவமைக்கும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கான வடிவமைப்பு போட்டியை இத்தாலியை சேர்ந்த ஃபெராரி கார் நிறுவனம் அறிவித்தது.
உலகம் முழுவதும் உள்ள பிரபல கல்லூரிகள் இதில் பங்கேற்றன. மொத்தம் 200 கல்லூரிகளின் சூப்பர் கார் வடிவமைப்பு புராஜெக்டுகள் இந்த போட்டியில் பங்கேற்றன. பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் அடிப்படையில் மாணவர்கள் சமர்ப்பித்த கார் டிசைன் புராஜெக்டுகள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன.
இதில், 7 கார் டிசைன்கள் மட்டும் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. அதில், புனேயை சேர்ந்த டிஎஸ்கே சுபின்ஃபோகம் என்ற கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் வடிவமைத்த சூப்பர் கார் டிசைனும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
வரும் ஜூலை மாதம் இந்த போட்டிக்கான இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் சூப்பர் கார் வடிவமைப்புக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும், கார் வடிவமைப்பு பயிற்சியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








