இந்தியாவில் சீன தயாரிப்பு மினிவேன்களை அறிமுகம் செய்யும் ஜிஎம்

General Motors Mini Van
டெல்லி: அடுத்த ஆண்டு சீன தயாரிப்பு மினிவேன்களை செவர்லே பிராண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளராக மாறியுள்ள ஜெனரல் மோட்டார்ஸ், சீனாவில் செயிக் மற்றும் வூலிங் ஆட்டோமோட்டிவ் கூட்டுக்குழுமத்தின் மூலம் 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் எஞ்சின் கொண்ட மினிவேன்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த மினிவேன்கள் 8 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதிகொண்டது. இந்த நிலையில், இந்தியாவில் மினிவேன்களுக்கு இருக்கும் தேவையை கருத்தில்க்கொண்டு இந்த இரண்டு மினிவேன் மாடல்களையும் செவர்லே பிராண்டில் அறிமுகம் செய்யப்போவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் சீனப்பிரிவு துணைத்தலைவர் மேத்யூ சியன் கூறியதாவது:

"சிறிய நகரங்கள் மற்றும் கிராப்புற போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் மினிவேன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, மினிவேன்களுக்கு இந்தியாவில் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதைக்கருத்தில்க்கொண்டு, சீனாவில் தயாரிக்கப்படும் இரண்டு மினிவேன் மாடல்களும் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளோம். செவர்லே பிராண்டில் இந்த மினிவேன்கள் விற்பனை செய்யப்படும்.

முதலில் சீனாவிலிருந்து பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் மினிவேன்கள் அசெம்பிளிங் செய்து விற்கப்படும். பின்னர் மினிவேன்களுக்கு அதிக அளவில் இந்தியாவிலேயே உதிரிபாகங்கள் பெறப்படும்," என்றார்

More from DriveSpark

Article Published On: Sunday, August 14, 2011, 10:41 [IST]
English summary
General Motors Co. will sell China- designed minivans carrying its Chevrolet brand in India starting next year as the automaker expands in Asia�fs second- fastest growing major economy.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+