விற்பனை அதிகரிக்க ஏ-ஸ்டாருக்கு ரூ.45,000 சலுகை:மாருதி வழங்குகிறது

Maruti Design Centre
டெல்லி: ஏ-ஸ்டார் காரின் விற்பனை பாதிக்கு மேல் சரிந்துள்ளதையடுத்து, அந்த காருக்கு ரூ.45,000 வரை சிறப்பு சலுகையை மாருதி வழங்குகிறது.

கடந்த மாதம் மாருதி நிறுவனத்துக்கு மறக்க முடியாத மாதமாக ஆகிவிட்டது. அந்த நிறுவனத்தின் விற்பனை வரலாறு காணாத வகையில் கால் பங்கு அளவுக்கு குறைந்தது.

ஆனால், இதையெல்லாம் புதிய ஸ்விப்ட் மூலம் சரிசெய்து கொள்ளலாம் என்று கணக்கு போட்டாலும், அது எந்த அளவுக்கு நிற்கும் என்பதை மாருதியால் கணிக்க முடியவில்லை.

இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான ஏ-ஸ்டார் காரின் விற்பனையும் கடந்த மாதம் படுத்துக்கொண்டது. சராசரியாக மாதத்திற்கு 4,000 ஏ-ஸ்டார் கார்கள் விற்பனையாகி வந்தது. ஆனால், கடந்த மாதம் வெறும் 1,734 கார்கள் மட்டும் விற்பனையானது.

இதனால், அதிர்ச்சியடைந்த மாருதி ஏ-ஸ்டாரின் விற்பனையை எப்படியாவது உயர்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. எனவே, அந்த காருக்கு ரூ.45,000 வரை சலுகைகளை வாரி வழங்குகிறது மாருதி.

இதில், 28,000 ரூபாய் நேரடி பணச்சலுகையாகவும், ரூ.15,000 எக்சேஞ்ச் போனசாகவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 14, 2011, 12:59 [IST]
English summary
Maruti Suzuki, India's leading carmaker has announced a new discount for the A-Star hatchback. The A-Star has not been among Maruti Suzuki's best selling models. Further, sales have declined by more than half since last year. To provide a sales boost to its export oriented model Maruti Suzuki is now offering a cash discount of Rs.28,000 along with a exchange discount of Rs.15,000
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+