இன்னும் 7 ஆண்டுகளில் ஒரு கோடி கார்கள்: மாருதி புது இலக்கு

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி இந்தியா, விற்பனையில் பல புதிய மைல்கற்களை தாண்டி சாதனை படைத்து வருகிறது. இந்திய கார் நிறுவனங்களில் ஒரே மாதத்தில் லட்சம் கார்கள் மற்றும் ஒரே ஆண்டில் மில்லியன் கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி சாதனை புரிந்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் ஒரு கோடி கார்கள் என்ற உற்பத்தி எண்ணிக்கையை எட்டுவதற்கு மாருதி சுஸுகி புதிய இலக்கு நிர்ணயித்துள்ளது.
மாருதி சுஸுகி இநதியா நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது:
"குர்கானில் உள்ள தொழிற்சாலை, ஆண்டுக்கு 8.5 லட்சம் கார்களையும், மானேசரில் உள்ள தொழிற்சாலை, ஆண்டுக்கு 3.5 கார்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும். இந்த தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுக்கு 12 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளோம்.
தவிர, இரண்டு புதிய தொழிற்சாலைகளை அமைக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைகள் செயல்பட துவங்கயதும் ஆண்டுக்கு 14 லட்சம் கார்களை உற்பத்தி செய்யலாம். இதன்மூலம், வரும் 2017 அல்லது 2018ம் ஆண்டுக்குள் உற்பத்தி எண்ணிக்கை ஒரு கோடியை எட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








