சுற்றுச்சூழலுக்கு உகந்த கார் ரேடியல் டயர்: எம்.ஆர்.எப். அறிமுகம்

அதிக எரிபொருள் சிக்கனம், குறைந்த உராய்வு மற்றும் தேய்மானம் கொண்ட எம்.ஆர்.எப். இசட்.எஸ்.எல்.கே. ரகத்தை சேர்ந்த கார் டயர்களுக்கு மார்க்கெட்டில் தனி மவுசு உள்ளது. ஹோண்டா சிட்டி, ஃபோர்டு பியஸ்ட்டா, ஹூண்டாய் கெட்ஸ், மாருதி வேகன்-ஆர், ஸ்கோடா ஆக்டாவியா, நிசான் மைக்ரா ஆகிய கார்களில் இந்த டயர்கள் பொருத்தப்படுகின்றன.
மார்க்கெட்டில் இசட்.எஸ்.எல்.கே. டயர்களுக்கு இருக்கும் வரவேற்பை கருத்தில்கொண்டு இந்த வரிசையில் புதிய டயர்களை எம்.ஆர்.எப். அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், இசட்.எஸ்.எல்.கே. வரிசையில் கார்களுக்கான மற்றுமொரு புதிய ரேடியல் டயரை எம்.ஆர்.எப். சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த டயர் சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில்,அதிக எரிபொருள் சிக்கனத்தை தரவல்லதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இந்திய சாலை நிலைகளில் இந்த டயர் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக எம்.ஆர்.எப். தெரிவித்துள்ளது.
பிரத்யேக சிலிக்கானில் தயாரிக்கப்படும் இந்த டயர்கள் மற்ற டயர்களைவிட 10 சதசவீதம் அளவிற்கு தேய்மானம் குறைவாகவும், அதிக ரோடு கிரிப் கொண்டதாக இருக்கும் என்று எம்.ஆர்.எப். தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








