சொகுசு கேரவன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது பைலட்

Caravan Interior
ஆடம்பர வசதிகளுடன் கூடிய கேரவன்கள் அல்லது நடமாடும் வீடுகள் மேலை நாடுகளில் பிரபலம். ஆடம்பரபங்களாவில் என்னென்ன வசதிகள் இருக்குமோ, அத்துனை வசதிகளையும் கொண்ட இந்த கேரவன்கள் தயாரிப்பில் பிரான்சை சேர்ந்த பைலட் நிறுவனம் புகழ்பெற்று திகழ்கிறது.

கடந்த 50 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் பைலட் நிறுவனம் விரைவில் இந்தியாவிலும் தனது ஆடம்பர வசதிகள் கொண்ட பங்களா பஸ்களை (கேரவன்)அறிமுகம் செய்ய உள்ளது. நவீன தொழில்நுட்பம், தரம், வடிவமைப்பு, பாதுகாப்பு, புதுமை, சொகுசு என அனைத்து வார்த்தைகளையும் தாரக மந்திரமாக கொண்டு இந்த தயாரிக்கப்படும் இந்த கேரவன்கள் இந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

மெர்சிடிஸ் மற்றும் ஃபியட் நிறுவனங்களின் சேஸிஸ்களில் இந்த கேரவன்கள் வடிவமைக்கப்படும் என்று பைலட் தெரிவித்துள்ளது. 3X ஃபியட் அவெந்துரா பி-730 எல்சிஏ, 1X மெர்க் எக்ஸ்ப்ளோரேட்டர் ஜி-783 எல்சிஇ, 1X மெர்க் எக்ஸ்ப்ளோரேட்டர் ஜி-743 எல்சிஇ மற்றும் 1X ஃபியட் அவெந்துரா பி-730 எல்சிஏ ஆகிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது பைலட்.

இந்த கேரவன்கள் 6 மீட்டர் முதல் 8.59 மீட்டர் வரை நீளம் கொண்டதாக இருக்கும். வாடிக்கையாளர் விரும்பும் வசதிகளுடன் இந்த கேரவன்கள் வடிவமைக்கப்படும். 50 வகையான வசதிகளை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த கேரவன்கள் பிரான்சிலுள்ள ஆலையில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்து டெலிவிரி கொடுக்கப்படும். பைலட் கேரவன்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் உரிமையை மெகாமோட்டோரென் அண்ட் லைப்ஸ்டைல் நிறுவனம்(பைலட் இந்தியா) பெற்றுள்ளது.

மேல்த்தட்டு மக்களின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில், இந்த கேரவன்கள் இருக்கும் என்றும், இந்தியாவில் தங்களது தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என்றும் பைலட் தெரிவித்துள்ளது. ஆடம்பரத்தை அள்ளித்தரும் இந்த கேரவன்கள் ரூ.75 லட்சம் முதல் ரூ.2 கோடி விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 14, 2011, 12:32 [IST]
English summary
French lifestyle automaker Pilote will introduce first lifestyle auto products in India soon. In the year 2010, Mega Motoren & Lifestyles Pvt Ltd (officially known as Pilote India) secured the exclusive distribution rights of Pilote products and also made the history by starting off the very first luxury motor homes business into India. The models entering India depends entirely on the preference of the client. Over all there are total 50 configurations available. All the vehicles will be right hand drive models with 3.0L engine (Fiat/Mercedes). The motor home will start from 6 meters (length) and will go up to 8.59 meters. The price range of the different models that would be available in India will range between Rs 75 lakh to Rs 2 crore.
 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+