அடுத்த ஆண்டு இந்தியாவில் டஸ்ட்டர் அறிமுகம்: ரினால்ட்

மஹிந்திராவிலிருந்து பிரிந்த பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம், இந்திய சந்தையில் விறுவிறுப்பாக களமிறங்கியுள்ளது.
புளூயன்ஸ் பிரிமியம் செடான் காரின் மூலம் இந்திய சந்தையில் தனித்து அடியெடுத்து வைத்த அந்த நிறுவனம், சமீபத்தில் கோலியோஸ் பிரிமியம் எஸ்யூவியையும் அறிமுகம் செய்தது.
இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு டஸ்ட்டர் எஸ்யூவியையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த காரை சென்னையிலுள்ள ஆலையில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.
1.5 லிட்டர் டிசிஐ டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆகிய மாடல்களில் டஸ்ட்டர் வர இருக்கிறது. இதில், பெட்ரோல் எஞ்சின் 105 பிஎச்பி ஆற்றலையும், அதிகப்பட்சம் 240என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
4 வீல் மற்றும் 2 வீல் டிரைவ் மாடல்களிலும் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








