மழைக்காலத்துக்கான சிறப்பு கார் பரிசோதனை:ஸ்கோடா

Skoda Fabia
டெல்லி: பருவ மழைக்காலம் துவங்குவதையொட்டி, கார்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாமை நடத்த இருப்பதாக ஸ்கோடா ஆட்டோ அறிவித்துள்ளது.

வரும் 15ந் தேதி முதல் 30ந் தேதி வரை நாட்டிலுள்ள அனைத்து டீலர்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களில் இந்த சிறப்பு கார் பரிசோதனை முகாம் நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஆகஸ்ட் மாதம் 15ந் தேதி முதல் 31ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போலன் பில்டர் கிளினிங், வீல் அலைன்மென்ட், பிரேக் பேடுகள் சரிபார்த்தல், பிளேனம் சேம்பர் கிளினிங், முகப்பு மற்றும் பின்பக்க விளக்குகள் சரிபார்த்தல், வைப்பர்கள் பரிசோதனை உள்ளிட்ட மழைக்காலத்தில் கார்களுக்கு தேவையான அனைத்து விதமான பரிசோதனைகளும் இந்த முகாமில் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்கோடா மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு இயக்குனர் தாமஸ் குயேல் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் மீதான நம்பிக்கையையும், திருப்தியையும் அதிகரிக்கும் விதமாக இந்த சிறப்பு பரிசோதனை முகாம் நடக்கிறது. இந்த பரிசோதனை முகாம் மூலம், மழைக்காலத்தில் வாடிக்கையாளர்கள் காரில் நிம்மதியாக சென்று வரலாம்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 14, 2011, 12:20 [IST]
English summary
Skoda Auto announced the launch of pre-monsoon check-up camps for its customers in the Indian market. The company will be providing a thorough 30 point check-up to the vehicles of visiting customers in these camps.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+