டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு டொயோட்டோவில் தொழிற்பயிற்சி

கார் உற்பத்தியை அதிகரிக்க டொயோட்டோ நிறுவனம் பல்வேறு விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு தக்கவாறு, கணிசமான அளவில் புதிய ஊழியர்களை நியமிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும், டிப்ளமோ படித்தவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் தொழிற்பயிற்சி பெறுபவர்களை தேர்வு செய்யும் காம்பஸ் இன்டர்வீயூக்களை அந்த நிறுவனம் நடத்த உள்ளது.
மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், ஐஇஎம், ஐபி, டூல் மற்றும் டை மேக்கிங் பிரிவுகளில் டிப்ளமோ படித்த தகுதிவாய்ந்த மாணவர்களை தேர்வு செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழிற்பயிற்சிக்காக தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.11,250 உதவித்தொகையும் (ஸ்டைபென்ட்), இதர சலுகைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








