விரைவில் இந்திய சந்தையில் வோக்ஸ்வேகன் அப்

கடந்த 2007ம் ஆண்டு பிராங்க்பர்ட் ஆட்டோஷோவில் அறிமுகமான அப் ஹேட்ச்பேக் கார் பார்வையாளர்களிடம் வெகுவாக கவர்ந்தது.
இந்த நிலையில், இந்திய சந்தையில் சிறிய கார்களுக்கு இருக்கும் மகிமையை கருத்தில்கொண்டு அப் காரை இன்னும் சில மாதங்களில் அப் காரை அறிமுகம் செய்ய வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.
இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்லும் வசதிகொண்ட அப் கார் வடிவமைப்பு, வசதிகளில் பிரமாதமாக இருக்கிறது.
இந்திய சந்தையில் அப் களமிறங்கினால், மாருதி வேகன்-ஆர், செவர்லே பீட், ஹூண்டாய் ஐ-10 கார்களுக்கு கடும் சந்தை போட்டியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
மாதத்திற்கு மாதம் அதிகரித்து வரும் வோக்ஸ்வேகனின் விற்பனைக்கு அப் வந்தால் மேலும் அப் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வோக்ஸ்வேகன் போர்ட்போலியோவில் போலோ ஹேட்ச்பேக் கார் குறைந்த விலை கொண்ட காராக இருக்கிறது. போலோ கார் ரூ.4.57 லட்சம் முதல் ரூ.7.06 லட்சம் விலையில் விற்கப்படுகிறது.
ஆனால், அப் வந்தால் வோக்ஸ்வேகனின் குறைந்த விலை கொண்ட கார் என்ற பெருமையை பெறும். இந்த கார் ரூ.4 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப் அறிமுகம் குறித்து வோக்ஸ்வேகன் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications








