அடுத்த ஆண்டு மினி டிரக் அறிமுகம்: பஜாஜ் அறிவிப்பு

Bajaj
டெல்லி: மோட்டார்சைக்கிள் மற்றும் ஆட்டோ தயாரிப்பில் கோலோய்ச்சி வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அடுத்த ஆண்டு மினிடிரக்கை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

நாட்டின் வர்த்தக நிறுவனங்களின் பயன்பாடுகளிலும், வளர்ச்சியிலும் மினிடிரக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், மினிடிரக்குகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

மினிடிரக் சந்தை தேவையை உணர்ந்துகொண்டு, உள்நாட்டு வாகன தயாரிப்பு ஜாம்பவான்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் பல்வேறு மாடல்களில் மினிடிரக்குகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில், டாடா ஏஸ் மற்றும் மஹிந்திராவின் மினிடிரக்குகள் விற்பனையில் சக்கைபோடு போடுகின்றன.

இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் மினிடிரக் தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் மினிடிரக்கை அறிமுகம் செய்யப்போவதாக பஜாஜ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ தலைவர் ராகுல் பஜாஜ் கூறுகையில்," இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் சிறந்து விளங்குகிறோம். இதைத்தொடர்ந்து, வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் வகையில் நான்கு சக்கர வாகன தயாரிப்பிலும் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

தற்போது, நிசான்-ரினால்ட் ஒத்துழைப்புடன் சிறிய காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதேபோன்று, அடுத்த ஆண்டு மத்தியில் மினிடிரக்கையும் அறிமுகப்படுத்த இருக்கிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Sunday, May 15, 2011, 11:05 [IST]
English summary
The Light Commercial Vehicles (LCV) market will witness some serious competition next year as several new entrants are trying to establish their footprint in the market. Now it has been reported that two- and three-wheeler major Bajaj Auto will launch its first light commercial vehicle in the Indian market next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+